track you order
Support +91 9442729261

My Cart -

0.00
0
There are 0 item(s) in your cart
Subtotal: 0.00
Sale!

SM 207 / குதிரைவாலி / BARNYARD MILLET / KUTHIRAIVALI

Original price was: ₹105.00.Current price is: ₹95.00.

Product Highlights

குதிரை வாலி அரிசி 1 kg

Buy Now
SKU SM 207 Category

Description

குதிரை சக்தி தரும் குதிரை வாலி அரிசி நன்மைகள்குதிரை வாலி அரிசி நன்மைகள், தீமைகள் மற்றும் குதிரை வாலி அரிசியில் உள்ள சத்துக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

குதிரை வாலி அரிசி :
குதிரை வாலி தினை வகைகளுள் ஒன்றாகும். (எக்கினோக்ளோவா ஃப்ருமண்டேசியா). இது இந்தியாவின் உத்தராஞ்சலின் மலைப் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

குதிரை வாலி வேகமாக வளர்ந்து வரும் பயிர் ஆகும். உகந்த தட்ப வெப்ப சூழ்நிலையில் இது விதைப்பு நேரத்திலிருந்து 45 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிறது.

குதிரை வாலி மனிதர்கள் ஜீரணிக்க முடியாத கடினமான செல்லுலோசிக் உமி அடுக்கு கொண்ட தானியமாகும். உமி அடுக்கு அகற்றப்பட்டதும் மனித பயன்பாட்டிற்கு தயாராகிறது.

குதரை வாலி அரிசி நன்மைகள்:
குதிரை வாலி வழக்கமாக நாம் உண்ணும் தானியங்களான அரிசி, கோதுமை, ரவை போன்றவற்றை விட சத்து நிறைந்த சிறப்பான உணவாகும். இந்தியா முழுவதும் எளிதில் கிடைக்கிறது, சிக்கனமானதும் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது.

மலச் சிக்கலை போக்குகிறது :
குதிரைவாலி அரிசியில் மற்ற சிறுதானியங்களைக் காட்டிலும் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. 25 கிராம் குதிரை வாலி அரிசியில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது.

ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குதிரை வாலி அரிசியில் 12.6 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து 4.2 சதவீதமும், கரையாத நார்ச்சத்து 8.4 சதவீதமும் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

x