track you order
Support +91 9442729261

My Cart -

0.00
0
There are 0 item(s) in your cart
Subtotal: 0.00
Sale!

SM 203 / பனி வரகு / PROSO MILLET / PANIVARAGU

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

Product Highlights

பனி வரகு 1 KG

Buy Now
SKU SM 203 Category

Description

சிறுதானியங்களில் பனிவரகுக்கு என்று முக்கிய இடமுண்டு. இது குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இதை ஆங்கிலத்தில் ‘Proso Millet’ என அழைப்பார்கள். ஒரு புன் செய் தானியம். சிறுதானியங்களில் மிகவும் குறைந்த நாட்களிலே வளரும் தன்மையுடையது பனிவரகு. இது குறுகிய கால வயதுடைய வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு பயிராகும். இது 90 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். பனிவரகில் அடங்கியுள்ள சத்துக்கள்

பனிவரகில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள், மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், நார்சத்து, கால்சியம், பி காம்ளக்ஸ், தாதுக்கள், கலோரிகள், ரிபோஃப்ளோவின், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.

வரகிற்கும் பனிவரகிற்கும் உள்ள வித்தியாசங்கள்
வரகு
இது வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பஞ்சம் வந்த முந்தைய காலங்களில் இந்த பயிரை நம்பியே பல ஆயிரக்கணக்கான மக்கள் பசியாறி வந்தனர். இதன் காரணத்தால் தான் இந்த பயிரின் விதைகளை கோவில் கோபுர கலசங்களில் வைத்து பூஜை செய்கின்றனர்.

இதன் விதைகள் நீண்ட காலம் சேமித்து வைத்தாலும் நன்றாக முளைக்கும் திறன் கொண்டவை. மிகக்குறுகிய காலத்தில் மிக குறைந்த மழை பெய்தாலும் அதை கொண்டு அதிக அளவு தானியங்களை உற்பத்தி செய்ய முடியும்.

உடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மையும், நுரையீரல் சம்பந்தமான நோய்களையும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் சக்தியும் வரகுக்கு உண்டு.

x